சிலகுழந்தைள் கல்வி கற்பதில் மந்தமாக இருப்பார்கள். சிலர் உயர்கல்வி பயில்வதில் மிகவும் சிரமப்படுவார்கள். சிலருக்கு உயர்கல்வி தடை படவும் செய்கின்றன. அதற்குன்டான காரணங்கள் பல. கல்வியாதிபதி, கல்வி ஸ்தானதிபதி, கல்வி ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் இவற்றின் தன்மையை வைத்து ஒவ்வொருரின் கல்வித் தகுதிகள் அமைகின்றன. மேற்படி கிரகங்களின் ஏதேனும் கிரகங்கள் பாதிக்கப் பட்டிருந்தால் கல்வித்தடை, கல்வி கற்பதில் மந்தம் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. மேற்படி எந்தக் கிரகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மிகத் துல்வியமாக கணித்து எத்தகைய தீபம் ஏற்றினால் நன்றாக படிப்பார்கள் என்று கூறப்படும். அத்தீபத்தை ஏற்றி அத்தீபத்தின் முன் அமர்ந்து படித்தால் மேற்படி தடைகள் விலகி இறைவனின் திருவருளால் நன்றாக படித்து வாழ்வில் முன்னேறுவார்கள்.
இந்தப்பிரபஞ்சத்தில் நமக்கென்று நாம் நான்கு சுவர் எழுப்பி நமக்கான வசிப்பிடமாகவோ, தொழில் செய்யும் இடமாகவோ அல்லது நமது சேமிப்பாகவோ உருவாக்கிக்கொள்கிறோம். அத்தகைய இடத்தில் பிரபஞ்ச சக்திகள் சரியான அளவிலும், பஞ்சபூத சக்திகளின் சுழற்சிகள் சரியான திசையிம் சுற்றினால்தான் நமது வாழ்க்கை என்¢னும் சக்கரம் சரியாகச் சுழலும். மேற்படி சக்திகள் சரியாக இருந்தால் நமது ஆரோக்கியம், நமது சிந்தனை அனைத்தும் சிறப்பாக இருக்கும். இவை சிறப்பாக இருந்தால்தான் நாம் வாழ்வில் வெற்றிபெற முடியும். இல்லையேல் வெற்றி என்பது எட்டாக் கனியாகிவிடும். இந்த சக்திகளின் சுழற்சிகள் சரியாக உள்ளதா என்பதை மிகத்துல்லியம்மாகப் பார்க்கப்படும். ஏதேனும் தவறிருந்தால் அதற்குன்டான எளிமையான தீர்வுகள் கூறப்படும். அதைக் கடைபிடித்தால் இறைவனின் திருவருளால் வாழ்வில் வெற்றிபெறலாம்.
தந்தை, தாய், சகோதரம், வாழ்க்கைத்துனை, புத்திரம், மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் குடும்ப ஸ்தானதிபதிகள், காரகர்கள், ஸ்தானத்தில் இருப்பவர்களை வைத்து மேற்படி நபர்கள் நமக்கு எவ்வளவு நன்மை செய்யக் கூடியவர்கள் என்பதை அறியலாம். மேற்படி கிரகங்கள் நட்பாக இருந்தால் மேற்படி உறவுகள் நமக்கு நட்பாக இருப்பார்கள். மேற்படி கிரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மேற்படி உறவினால் நமக்கு பகை உண்டாகும். ஏதேனும் பாதிப்பு நமது ஜாதகத்தில் இருந்தால் மிகத் துல்லியம்மாக கண்டுபிடித்து அதற்குரிய தீ¢ர்வுகள் பண்டைய கால ஜோதிட முறைப்படி கூறப்படும். அதை கடைபிடித்தால் இறைவனின் திருவருளால் குடும்பத்தில் ஒற்றுமை உயரும். அதனால் மனநிம்மதி உண்டாகும். வாழ்வில் வெற்றி பெறலாம்.
சிலருக்கு திருமணம் நடைபெற்று பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பார்கள். அதற்கான காரணங்கள் பல. இருவரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானதிபதியோ, புத்திர காரகனோ அல்லது புத்திர ஸ்தானத்தில் இருப்பவரோ கெட்டுப்போயிருந்தால் புத்திர பாக்கியம் தடைபடும். அல்லது அவர்களின் சாந்தி முகூர்த்த நேரம் தவறாக கணிக்கப்பட்டிருந்தாலும் புத்திர பாக்கியத் தடை உண்டாகும். இதுபோல் பல காரணங்கள் இருந்தாலும் என்ன பிரச்சனை என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து மேற்படி பிரச்சனைகளுக்கு பண்டைய ஜோதிட முறைப்படி தகுந்த வழிமுறைகள் மூலம் தீர்வுகள் கூறப்படும். அவ்வழிமுறைகளை பின்பற்றினால் விரைவில் இறைவனின் திருவருளால் புத்திரத்தடை விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.
கோவில் புனரமைக்க, புதிய கோவில் கட்ட, மனிதர்களால் ஏற்பட்ட தெய்வகுத்தங்கள் அறிந்து அதற்குன்டான தீர்வு காண பிரசண்ணம் பார்க்கப்படும். ஜாதகம் இல்லாதவர்களுக்கும், காணாமல் போன பொருட்கள் கண்டுபிடிக்க, பூர்வ ஜென்ம/முன்னோர்கள் சாபங்கள்/தெய்வ குற்றங்கள் அறிந்து அதை நிவர்த்தி செய்ய, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க, குலதெய்வம் அறிய, பிரசண்ணம் பார்க்கப்படும்.
வாழ்வில் பிறப்புச் சான்றிதழ் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் ஜாதகமும் மிகமிக முக்கியம். ஏனென்றால் இந்த ஜாதகத்தை வைத்து நம் வாழ்வில் நடைபெறப்போகின்ற நன்மை தீமை அறிந்து அதன்படி செயல்படி உதவும். ஜாதகம் நம் வாழ்வின் வழிகாட்டி. வழிகாட்டுவது ஜாதகம். வழிநடத்திச் செல்வது நாமாக இருக்கவேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜாதகத்தை மிகத் துல்லியம்மாக கணித்து எழுதித்தரப்படும்.
வாழ்வில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக தொடர்பு கொண்டால் பண்டையகால ஜோதிட முறைப்படியும் சித்தர்களின் வழிகாட்டுதல்படியும் தீர்வு கூறப்படும். அவ்வழிகாட்டுதல்படி செயல்பட்டால் இறைவனின் திருவருளால் அனைத்து தடைகளையும் தகர்த்து வாழ்வில் வெற்றிபெறலாம்.
நமது ஜாதகத்தின் களத்திராதிபதி, களத்திராதிபன், களத்திர ஸதானத்தில் இருப்பவன் இவர்களின் நிலை அறிந்தும், தற்போது நடைபெறும் திசாபுத்திகளின் அடிப்படையில் திருமணம் நடபெறும் காலத்தை கணிக்கவேண்டும். ஏதேனும் தோஷம் இருப்பின் அது சம்பந்தப்பட்ட கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தால் அல்லது அக்கிரகத்துக்குரிய முறையில் வீட்டில் தீபம் ஏற்றினால் விரைவில் திருமணத் தடை விலகி இறைவனின் திருவருளால் திருமணம் இனிதே நடைபெறும்.
தொழில் என்பது தொழில் ஸ்தானதிபதி, தொழில் காரகன், தொழில் ஸ்தானத்தில் இருப்பவர்கள் இவர்களைக் கொண்டு என்ன தொழில் செய்யலாம் என்பதை அறியலாம். அத்தொழில் எவ்வளது லாபம் வரும் அல்லது எவ்வளவு செல்வம் வீடு வந்து சேரும் என்பதை லாபாதி,தனாதிபதி, லாப ஸ்தானத்தில், தன ஸ்தானத்தில் இருப்பவர்கள் வைத்து முடிவு செய்ய வேண்டும். மேற்படி தொழில் ஸ்தானத்தோடு லாப ஸ்தானமும் தன ஸ்தானமும் நட்பாயிருந்தால் தொழிலில் வெற்றி பெற்றும் அதனால் அடைந்த பலனை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கலாம். மேற்படி ஸ்தானதிபதிகள் பகையாயிருந்தால் பலனை அனுபவிக்க முடியாது. மேலும் பல காரணங்கள் தொழிலில் வெற்றி பெற உள்ளன. அதனால் நமது ஜாதகத்தில் என்ன தொழில் செய்யலாம், என்ன தொழில் செய்தால் வெற்றி பெற்று அந்த வெற்றியின் பலனை அனுவிக்கலாம் என்பதை மிகத் துல்லியமாக கணித்துக் கூறப்படும். ஏற்கனவே செய்கின்ற தொழிலில் ஏதேனும் தடைகள் இருந்தால் அத்தடைகள் விலக பண்டைய கால சித்தர்கள் வழிகாட்டுதல்படி தக்க தீர்வுகள் கூறப்படும். அதனை சரியாக கடைபிடித்தால் இறைவனின் திருவருளால் தொழில்கள் நல்ல முறையில் அமைந்து வெற்றி பெறலாம்.
பெயருக்கென்று ஒரு வசியம், வீரியம் உள்ளது. அப்பெயர்களில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சக்தி உள்ளது. நமது ஜாதகத்திற்கேற்றபடி குழந்தைகளுக்கும், தொழில் நிறுவனத்திற்கும் அஸ்ட்ரோநியுமராலஜிப்படி வெற்றிகரமான பெயர் அமைத்துத் தரப்படும். அஸ்ட்ரோநியுமராஜிப்படி நமக்குரிய வெற்றிகரமான எண் தேர்வு செய்துத் தரப்படும். அந்த எண் உங்கள் வாழ்வில் இனைத்துக்கொண்டால் நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நீங்கள் வாழ்வில் வெற்றிபெறலாம்.
புத்திரபாக்கியத் தடை என்பது நமது ஜாதகத்தில் உள்ள புத்திரகாரகன், புத்திரஸ்தானாதிபதி, புத்திரஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் இவற்றில் ஏதாவது கிரகம் வலுவிலந்தாலோ, பாதிக்கப்பட்டிருந்தாலோ புத்திரபாக்கியம் தடைபடுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எப்படி தடைபடும் என்றால் ஆணின் விந்தனுக்ளில் உள்ள உயிரனுக்கள் கம்மியாக இருக்கலாம், பெண்ணின் கருமுட்டை உற்பத்தி கம்மியாக இருக்கலாம், அல்லது இருவருக்கும் சரியாக இருந்து உயிரனுவும் கருமுட்டையும் இனையாமல் இருக்கலாம். நமது உடலானது தினசரி சந்திரனின் கோச்சாரத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியது. உதாரணமாக நமக்கு சிலசமயம் காரமாக சாப்பிடவேண்டும் போல் இருக்கும். சிலசமயம் இனிப்பாகவும், சிலசமயம் புளிப்பாகவும் இருக்கும். இந்த மாற்றம் எதனால் என்றால் சந்திரனின் கோச்சார சஞ்சாரமே காரணம். அதேபோல் இந்த சந்திரனின் கோச்சார சஞ்சாரத்தின் அடிப்படையில் வைத்து எந்த நாள் உயிரனுவும் கருமுட்டையும் ஒன்றாக இனையும் நாள் என்று அவரவர் ஜாதகத்தை வைத்துப் பார்த்து அந்த நாட்களில் இணைந்தால் கண்டிப்பாக புத்திர பாக்கியம்கிட்டும். இது 100 சதவீத அனுபவ உண்மை. இதில் பல வெற்றிகள் இறைவனின் திருவருளால் எனக்கு கிட்டியது.
மிக அருமையான கேள்வி. இவ்வாறு ராசிபலன்களில் கூறப்பட்டதைப்போல் நடக்காததால் பலரும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். பொதுவாக மொத்த ராசி என்பது 12 தான். இவ்வுலகில் உள்ள அனைவரும் இந்த 12 ராசிக்குள்தான் வருவார்கள். அப்படியானால் இவ்வுலகில் 12 வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்களா?. இல்லையே. பிறகு எப்படி ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒரே மாதிரி பலன்கள் நடைபெறும் என்பதை நம்புகின்றீர்கள். உதாரணமாக நகைக்கடைக்காரர்களை எடுத்துக்கொள்வோம். அனைத்து நகைக்கடைக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக வியாபாரம் நடக்கின்றதா? அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தில் இருக்கின்றார்களா? அனைத்துக் கடை நகைகளும் ஒரே தரத்தில் இருக்கின்றதா? இவை எதுவும் இல்லையே. எப்படி அனைத்து நகைக்கடைக்காரர்களுக்கும் ஒரே விதமான பலனை கூற முடியாதோ அதைப்போலவே ஒரே ராசி காரர்களுக்கு ஒரே பலனைக் கூறமுடியாது. எப்படி அவரவர் நகைக்கடைக்கேற்ப தரம், கனிவான பேச்சு, டிசைன் பொருத்து வியாபாரம் நடக்கின்றதோ அதைப்போலவே அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொருத்தும், நடக்கும் திசா புத்தியைப் பொருத்தும் பலாபலன்கள் மாறுபடும். இன்னொரு உதாரணம். சனி பெயர்ச்சியானால் மூன்று ராசிகளுக்கு மட்டும் ஏழரைச்சனியாவும் இரண்டு ராசிகளுக்கு மட்டும் கண்டச்சனி மற்றும் அஷ்டமத்துச் சனியாகவும் வருவார். அப்படியானால் இந்த ஐந்து ராசிக்காரார்கள் மட்டும் தான் கஷ்டப்படுகின்றார்களா? மற்ற ஏழு ராசிக்காரார்களும் நலமாக இருக்கின்றார்களா? இல்லையே. இந்த ஐந்து ராசிக்காரர்களில் நன்றாக இருக்கிறவர்களும் இருக்கின்றார்கள், மற்ற ஏழு ராசிகளில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இது ஏனென்றால் நான் முன்னமே கூறியதைப்போல அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொருத்தும், நடக்கும் திசா புத்தியைப் பொருத்தும் பலாபலன்கள் மாறுபடும். ஆகவே ராசிபலன்கள் மட்டும் பார்க்காமல் அவரவர் ஜாதகத்தின் நிலையையும் அறிந்துகொள்ளவும்.
“ஓம் வ்ஜர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ரீÖய தீமஹி தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”
12, மொௗங்கூர் ஜோதி நகர், செந்தில் மில், பின்புறம், தடி காம்பி சாலை, திண்டுக்கல்.
ஸ்ரீ பேச்சியம்மன் திருமண தகவல் மையம்© All Rights Reserved, Designed by Viswaroop